Sunday, April 05, 2015

தீரா வினை தீர்க்கும் திருக்கயிலை நாதர் தரிசனம் - 18

முதல் நாள் கிரிவலம் - 3 

ஐயனின் வாமதேவ முக தரிசனம் 

கிரிவலப்பாதை 

இடையில் சில உணவகங்கள்

இரண்டாம் வணங்கிடத்தில்  ஐயனின் மேற்கு முக தரிசனம் அருமையாக பெற்றோம். சிறிது நேரம் அமர்ந்து ஒய்வெடுத்துக்கொண்டோம். காலை சிற்றுண்டியை முடித்தோம். குப்பிகளில் சுடு  தண்ணீர்  நிரப்பிக்கொண்டோம்.  பின்னர் திருவந்தெழுத்தை மனதில் ஜெபித்துக்கொண்டே கிரி வலத்தை தொடர்ந்தோம்.  


வடக்கு மற்றும் மேற்கு முகங்கள் இனைந்த தரிசனம்( மேகம் மூடியுள்ளது)
வழியில் ஒரு பருமனானவர் இரண்டு போட்டர்களுடன் மிகவும் சிரமப்பட்டு  நடந்து  சென்று கொண்டிருந்தார். குதிரையில் சென்று கொண்டிருந்தவர்களை ஐயா குதிரை கொடுத்து உதவுங்கள் என்று கெஞ்சிக்கொண்டிருந்தார். அடியேன் குதிரை கொடுத்து உதவ் முன் வந்தேன். ஆனால் அவருக்கும் குதிரைக்காரருக்கும் கட்டணத்தில் உடன்பாடு ஏற்படவில்லை எனவே திரும்பி அடியேன் குதிரையில் புறப்பட்டேன். சிறிது தூரம் சென்றவுடன் அடியேனின் குழுவில் இருந்த பருமனான  ஒருவர் அதே போல நடக்க முடியாமல் நின்று கொண்டிருந்தார். அவருக்கு குதிரையை கொடுத்துவிட்டு அடியேன் நடக்க ஆரம்பித்தேன். மிகவும் பருமனாக இருப்பவர்கள் ( அதாவது BMI >30)   நடக்காமல் குதிரையில் செல்வது சாலச் சிறந்தது.   

வழியில் சில  புனித நினைவிடங்கள் 


ஒரு சிறு பறவை 

ஐயனின் முதல் வடக்கு முக தரிசனம் 

குமாரசாமி ஐயா 

வேகமாக நடந்து சென்றதால்  குமாரசாமி ஐயா பனிப்பொழிவிற்கு முன்னரே டேராபுக்கை அடைந்து விட்டார். அவருக்கு கிடைத்த தரிசனம் .  அவலோகிதேஸ்வரர் மற்றும் வஜ்ரபாணி மலைகளுக்கு ந்டுவில் உள்ள ஐயனின் வடக்கு  முகத்தில் இருந்து ஓடி வரும் கங்கம் ஆற்றின்   கங்கம் பள்ளத்தாக்கில் மேலே ஏறி சென்று ஐயனை அருகாமையில் தரிசித்து வந்ததாக  கூறினார். 


இந்த பைரவரின்  வாகனத்தை கிரி வலத்தின் முதல் நாள் பார்த்தோம். எங்களுடனே பல சமயம் வந்தது. இதன் தாத்பர்யம் என்னவென்று கிரி வலத்தின் நிறை  நாள் விளங்கியது. அது என்ன என்று அறிந்து கொள்ள அடியேனுடன்  தொடர்ந்து கிரிவலம் வாருங்கள். 


அடியோங்கள் தங்கிய விடுதியிலிருந்து வாமதேவ முக தரிசனம் 



காப்பு மலைகள் அவலோகதேஸ்வார் வஜ்ரபாணீக்கிடையில் எழும் ஞாயிறு போன்று வாமதேவ முகம்  






தங்கும் விடுதி 


லதா அம்மா


ஐயனின் அருகாமை தரிசனம் 


டேராப்புக்கை நெருங்க நெருங்க சிறிது ஏற்றமாக இருந்தது. வானமும் இருட்டிக்கொண்டு வந்தது. அடியேன் முகானின் அருகில் சென்றவுடன் பனிப்பொழிவு ஆரம்பித்தது. உடனே அரும்காமையில் இருந்த ஒரு கூடாரத்தில் நுழைந்து கொண்டோம். சுமார் அரை மணி நேரம் சரியான பனிப்பொழிவு இருந்தது. ஒரு சில யாத்த்திரிகள் இதில் மாட்டிக்கொண்டனர். பனி ப்பொழிவ்வு நின்ற பிறகு  சேர்ப்பா வந்து எங்கள் தங்கும் விடுதிக்கு அழித்து சென்றார்.  ஐயனின் முழு முக தரிசனம் மேக மூட்டத்தின் காரணமாக கிட்டவில்லை. இரவு மூன்று மணிக்கு முழு தரிசனம் கிட்டியது என்று குமாரசாமி ஐயா கூறினாற். பனிப்பொழ்விற்கு பிறகு ஐயனின் தரிசனம் எவ்வாறு  இருந்தது என்பதை அடுத்த பதிவில் காண்லாமா அன்பர்களே. 


 மாணிக்க வாசக சுவாமிகள் அருளிய கண்ட பத்து 

இந்திரிய வயம் மயங்கி  இறப்பதற்கே காரணமாய்
அந்தரமே திரிந்து போய் அரு நரகில்வீழ்வேற்குச்
சிந்தைதனை தெளிவித்து சிவமாக்கி எனை ஆண்ட
அந்தம் இலா ஆனந்தம் அணிகொள் தில்லை கண்டேனே!  (1)

                                                                                                                                               யாத்திரை தொடரும் . . . . . 


No comments: