மூன்று முக தரிசனம்
கிரிவலத்தை தொடரவேண்டாம் டார்ச்சன் திரும்பி விடலாம் என்று முடிவு செய்த அன்பர்கள் இரண்டாம் நாள் கிரி வலத்தின் போது பெற்ற தரிசனம் இப்பதிவில் இடம்பெறுகின்றன.
டார்ச்சனுக்காக கிளம்புகின்றனர்
குதிரைகள் தயாராகின்றன
அதிகாலை சூரிய கால சமயத்தில் வாமதேவ முகத்தின் தரிசனம்
இந்த வண்ண வண்ண கூடாரங்களில்தான் குதிரையோட்டிகள் இரவு தூங்குகின்றனர்.
மஞ்சு ஸ்ரீ மலை
வ\டக்கு மற்றும் மேற்கு முகம் இணைந்த காட்சி
மேற்குமுக தரிசனம்
கிரிவலப்பாதையில் சுகந்தி அவர்கள்
சுகூ புத்த விகாரம்
தெற்கு முக தரிசனம்
சென்ற போது மேகம் மறைத்ததால் தெற்கு முக தரிசனம் கிட்டவில்லை ஆனால் திரும்பி வரும் போது அம்முக தரிசனமும் அருமையாக கிட்டியது.
யமதுவாரம்
யமதுவாரமும் பின் புலத்தில் திருக்கயிலாயமும்
திரும்பி வரும் போது மிகவும் அவசரப்படுத்தினார்களாம் அதுவும் குதிரைக்காரர்கள் மிகவும் அவசரமாக வந்ததால் மூன்று பெண்கள் கீழே விழுந்து விட்டனராம். அதில் ஒருவருக்கு கழுத்தில் அடிபட்டு சிசிச்சை செய்யும்படி ஆகிவிட்டதாம். மருத்துவ வண்டி வந்து அதில் உள்ள மருத்துவர் மருந்து மாத்திரைகள் கொடுத்தாராம். அதற்கான கட்டணத்தையும் வசூலித்தனராம். பின்னர் அவர்கள் டார்ச்சன் அடைந்து கிரிவலம் சென்றவர்கள் வருவதற்காக காத்திருந்தனர்.
டார்ச்சன் சென்ற பின் ஒருவரின் உடல் நிலை மிகவும் மோஸமாகிவிடவே அவரை அழைத்துக்கொண்டு கீழே சென்றுவிட்டனர். இவ்வாறு தனியாக செல்லும் போது சில சமயம் சீன அரசு குழு விசாவே வழங்குகின்றது என்பதால் தனியாக செல்பவர்கள் எல்லையை கடக்க நேரிடும் போது அபராதம் செலுத்த வேண்டி வரும். ஆகவே இவ்வழியாக செல்லும் போது யாத்திரைக்கு முன்னரே உடலை உயர் மட்டத்திற்கு ஏற்றவாறு தயார் படுத்தி கொள்ளவேண்டும்.
டார்ச்சனில் ஓய்வு
டார்ச்சனில் ஒய்வெடுத்தனர் மற்றும் சுற்றி வந்து ஐயனை பல முறை தரிசித்தனர் மற்றும் மணி மாலைகள் வாங்கினர்.
பிறவிதனை அறமாற்றி; பிணி மூப்புஎன்று இவை இரண்டும்
உறவினோதும் ஒழியச்சென்று; உலகு உடைய ஒரு முதலை
செறுபொழில் சூழ் தில்லைநகர்த் திருச்சிறம்பலம் மன்னி,
மறையவரும் வானவரும் வணங்கிட நான் கண்டேனே!
யாத்திரை தொடரும் . . . . . .
No comments:
Post a Comment